தென்கொரியாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் சில பேர் காணாமல் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தென்கொரியாவில் சில நாள்களாக கனமழை மழை பெய்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இதில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது.
தலைநகர் சியோலில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுு இருக்கின்றன. தென் கொரியா அரசு 45,000-க்கும் மேல் மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் நியமித்துள்ளது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 15 பேர் இப்பொழுதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.