Categories
உலக செய்திகள்

தென்கொரியா: “இதை தவிர்த்துக்கொள்ளுங்கள்”…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தாலும் கூட, உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள போதும் அது தன் ஏவுகணை சோதனைகளை நிறுத்திய பாடில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாடு ஐசிபிஎம் என அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்யும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்க வல்லரசையும் அதிரவைத்தது. 4 வருடங்களுக்கு பின் இதுபோன்ற சோதனையை தற்போதுதான் வடகொரியா நடத்தியுள்ளது. இந்நிலையில் அண்மையில் தென் கொரியாவிலுள்ள ஏவுகணை செலுத்தக்கூடிய மையத்துக்கு அந்நாட்டின் ராணுவமந்திரி சூஊக் சென்றபோது வட கொரியாவின் ஏவுகணைசோதனையை விமர்சித்தார்.
அதாவது “தென் கொரியாவின் மீது வட கொரியா ஏவுகணைகளைஏவுவதற்கான திட்டம் ஏதும் வைத்து இருந்தால் அந்நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார்நிலையும் தென் கொரியாவுக்கு உள்ளது” என தெரிவித்தார். இந்த வார்த்தைகள் வட கொரியாவை அதிரவைத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக வடகொரியா தலைவரான கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தென்கொரியாவை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைகையில் அவர் கூறியதாவது, அணு ஆயுதம் வைத்து உள்ள ஒரு நாட்டைப் பார்த்து அழுக்கு நுரை ஆகிய ஒருவர் முன் எச்சரிக்கை விடுப்பது விவேகம் இல்லாதது ஆகும். இதனிடையில் தென் கொரியா அதன் ராணுவ மந்திரியின் பொறுப்பேற்ற கருத்துகளுக்கு எதிராக ஒருதீவிர அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பேரழிவினை தவிர்க்க விருப்பப்பட்டால் தென்கொரியாவானது தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வடகொரியா ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியில் இந்த கிம் யோ ஜாங்தான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா குறித்த விஷயங்களில் பொறுப்பு அதிகார மையம் ஆவார். இவர் தான் வட கொரியாவில் தலைவர் கிம் ஜாங் அன்னிற்கு அடுத்த 2ஆம் இடம் வகிக்கிறார் என்று தென்கொரியாவின் உளவு அமைப்பு தெரிவிக்கிறது. கிம் யோ ஜாங்கைப் போல் தொழிலாளர் கட்சியின் செயலாளர் பாக் ஜாங் சோனும் தென் கொரியாவை எச்சரித்து உள்ளார். இதனையொட்டி அவர் கூறியபோது “வட கொரியாவை, தென்கொரியா முதலாவதாக தாக்கினால் சியோல் மற்றும் தென்கொரிய ராணுவத்தின் முக்கியமான இலக்குகளை அழிப்பதற்கு ராணுவ சக்தியை கருணை இன்றி வடகொரியா கட்டளையிடும்” என எச்சரித்தார். இந்த பிரச்சினையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

Categories

Tech |