Categories
உலக செய்திகள்

தென்கொரியா: குறையும் கொரோனா பாதிப்பு…. கட்டுப்பாடுகள் நீக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென் கொரியாவில் ஒமிக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் சென்ற 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாதம் மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டி இருந்தது. இதனால் அங்கு கொரோனா நெறிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் சென்ற சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பானது 1¼ லட்சமாக குறைந்து உள்ளது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 846 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து அங்கு நடைமுறையிலுள்ள கொரோனாகட்டுப்பாடுகள் அனைத்துமே நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வரும் 18-ஆம் தேி முதல் இரவுநேர ஊரடங்கு, தனியார் நிகழ்ச்சிகளில் 10 நபர்களுக்கு அதிகமாக கூடுவதற்கான தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பொதுயிடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது இன்னும் 2 வாரங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |