# தென் கொரியாவில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அங்கு இருக்கக்கூடிய பாஸ்ட் ரெஸ்டாரன்ட் அனைத்தும் இரவு 11 மணிக்கு அடைத்துவிடுவார்கள். ஆனால் ஷாப்பிங் மால் மட்டும் அதிகாலை 4 மணி வரை இருக்கும்.
# இதையடுத்து தென்கொரியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மிகவும் பிரபலமானது. மேலும் அனைத்து விதமான முக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. உலகத்தில் உள்ள பல மக்கள் தென்கொரியாவுக்கு செல்வதற்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை காரணம் ஆகும்.
# தென்கொரியாவில் செல்பி மற்றும் குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அங்கு இருக்கக்கூடிய மக்களை சிரிக்க வைக்க சீஸ் என்ற வார்த்தைக்கு பதிலாக கிம்ஜி என்ற வார்த்தையே தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
# தென்கொரியாவில் ஆண்கள் அனைவரும் பெண்கள் போன்று makeup செய்து கொள்வர். இவர்கள் உலகிலுள்ள ஆண்களில் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார். அதாவது இவர்கள் பெண்களை போன்று lipstick , eyeliner ஆகிய பொருள்களை தங்களுடன் வைத்து கொள்வார்கள். மேலும் அங்குள்ள பெண்களை விட ஆண்கள் அதிகமாக மேக்கப் போட்டுகொள்ளுவார்கள். பிற நாடுகளை ஒப்பிடும்போது இது வேடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது.
# தென்கொரியாவில் ரோபோக்களின் எண்ணிக்கையானது அதிகம் என்றே கூறலாம். இதன் காரணமாக இவைகள் பல இடங்களில் பயன்படுகிறது. இங்கு ரோபோக்கள் தொழிற்சாலைகளில் மட்டுமல்லாது, சிறைக்காவலர்கள், பணியாளர்கள் (அல்லது) ஆசிரியர்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்கொரியா ஹோட்டல்களில் நீங்கள் ரோபோக்களை மட்டும்தான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவுக்கு ரோபோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.