வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் , அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ஆலங்குடி, தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதி, மதுக்கூர், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.
குமரி கடல் பகுதியில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 மணி கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மாலத்தீவில் வரும் 22ஆம் தேதி பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.