Categories
தேசிய செய்திகள்

தென்னக ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் கூறியதாவது, கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் நடைமுறை இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும். மேலும் நடைமேடை டிக்கெட் விலை 50 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |