Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்னதோப்பில் 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு ..!!காரணம் என்ன ?இளைஞன் கைது ..!!

தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன்  என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

மேலும் சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக மூதாட்டியை தலையில் கல்லை போட்டு பயங்கரமாக கொலை செய்துள்ளார் . இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |