முதியவரை கொடூரமான முறையில் காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே பெருந்தலைக்கோடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கரை பகுதியில் இருக்கும் தென்னந்தோப்புக்கு ஓலைகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி மணியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
இதில் மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.