தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைத்திருப்பதாக முதல் மந்திரி பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்து பேசும்போது, பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற இரண்டாவது முனையத்தை திறந்து வைக்கிறார். இதனை அடுத்து அதே விழாவில் கேம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கின்றார்.
அதன் பின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகின்றார். இதனை அடுத்து அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் ஐந்தாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் போலீஸ் சுப்ரண்ட் பாஸ்கர் போன்ற காந்தி கிராம பல்கலைக்கழகங்களுக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.