இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், பிரபுதேவா நடனத்தில் உருவாகி ஹிட்டடித்த பாடல் ரவுடி பேபி. மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடனம் ஆடியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இந்த பாடலை விரும்பி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடல் யூடிபில் ஐந்து மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இதுவே ஆகும்.
Categories