Categories
மாநில செய்திகள்

“தென்னிந்தியாவில் முதல் முதலாக ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது பெறும் தமிழர்”… முதல்வர் வாழ்த்தி ட்விட்…!!!

உலக அளவில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ அமைப்பு சார்பில் வழங்கபடும் விருதுக்கு தமிழர் ஒருவர் தேர்வு.

உலக அளவில் பத்திரிக்கை கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதை “வேர்ல்டு பிரஸ் போட்டோ” அமைப்பு வழங்கி வருகின்ற நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்.

இவர் பத்து வருடங்களாக புலிகளுக்கும் மனிதர்களுக்குமான வாழ்வியலை புகைப்படத்தை பதிவு செய்ததற்காக தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “மனித – வனவிலங்கு மோதலை வெளிக்கொண்டுவரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை !” என பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |