தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி , பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர்.
அதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பூச்சி முருகன், லதா, ராஜேஷ், கோவை சரளா, சச்சு ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிர்வாகிகள் அனைவரும் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நிதி உதவிகள் திரட்ட முன்னணி நடிகர், நடிகைகளை சந்திக்கவுள்ளனர்.