தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசுதா. இவர் அண்மையில் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தென்னிந்திய நடிகைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக நடிகை ஜெயசுதா ஆதங்கம் தெரிவித்தார். அதன் பிறகு வெறும் 10 படங்களில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளது.
ஆனால் உலகில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விஜய் நிர்மலாவுக்கு இது போன்ற பாராட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் தென்னிந்திய நடிகைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.