பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கின்றது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. படம் பார்ப்பவர்களும் “ராஜமவுலி இஸ் கம்பாக்” என பாராட்டி வருவதோடு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரின் நடிப்புகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே ட்விட்டரில் போட்ட பதிவானது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, “ராம்சரணை ஜூனியர் என்டிஆர் தன் தோள்களில் அமர வைக்கின்றார். அதன் பிறகு அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயிரம் பேரை இருவரும் எதிர்கொள்கிறார்கள். என்ன ராஜமவுலி ஜி? இதுபோன்ற முட்டாள்தனமான காட்சிகளை எல்லாம் மூளை இல்லாத தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும்” என கூறியதால் தென்னிந்திய ரசிகர்கள் கோபம் அடைந்து விளாசியுள்ளார். கே.ஆர்.கே படக்காட்சியை வெளியிட்டு இது என்னவாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் சிலரோ இவருக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.