Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? விவசாயிகளுக்கு விளக்கம்…. அசத்தும் மாணவர்கள்…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தென்னை மரங்களில் அதிக அளவு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்களித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 11 பேர்  ஆனைமலையில் தங்கியுள்ளனர்.  இவர்கள் கிராமப்புற ஊரக வேளாண் பணிகளை  செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வேட்டைக்காரன் புதூரில் சமூக வரைபடம் ஒன்றை வரைந்துள்ளனர். அந்த வரைபடத்தின் மூலம் வேளாண் பொருட்கள் கிடைக்கும் அலுவலகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் தென்னை மரங்களில் அதிக சாகுபடி செய்வது   குறித்தும் கூறியுள்ளனர். அதாவது தென்னை மரங்களில் என்ன மருந்து தெளிக்க வேண்டும், எந்த மாதிரியான உரம் போடவேண்டும், தென்னை மூடாக்கு, தென்னை டானிக் மற்றும் அதற்கான கால அளவு குறித்து கிராம மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். மேலும்  வேளாண்மை அனுபவங்கள் பற்றி விவசாயிகளிடம்  ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

Categories

Tech |