மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேசன் (29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நடிகர் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் ஒரு தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் கதிரேசனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கதிரேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கதிரேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.