நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது வீட்டில் தென்னை மரங்கள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் திறக்கவில்லை.
அதனால் வீட்டில் இருந்த அந்த ஏழு வயது சிறுமி தென்னை மரங்களில் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்ட உறவினர்கள் சிறுமிக்கு தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி அளித்துள்ளனர். அதனால் நன்கு பயிற்சி பெற்ற அந்த சிறுமி, மிகுந்த ஆர்வத்துடன் தென்னை மரங்களில் வெறும் கால்களிலேயே விருவிருவென ஏறி இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து அசத்தி வருகிறார்.