Categories
மாநில செய்திகள்

தென்னை மர தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு….!!!!

தமிழகத்தில் தென்னை மர தொழிலாளர்நலனை பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது உடல் ஊனமடைந்தால் அவரின் வாரிசுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு 18000 ரூபாய், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு 3000 ரூபாய், இறுதி சடங்கு செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 375 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இதில் விருப்பமுள்ளவர்கள் http://www.coconutboard.gov.inஎன்ற தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழ் உடன் காப்பீட்டு தொகையை செலுத்தி திட்டத்தில் இணையலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |