Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில்,” 2,000 வருடங்களுக்கு முன் இருந்த சங்ககால உறைகிணறுகள்”… கண்டுபிடிப்பு ..!!!

தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறுகள் இருப்பதாக வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கண்டுபிடித்தார்.

விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் சிறிது பெரிதுமாக உறைகிணறுகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிடாகம் குச்சிபாளையம் எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு செய்தபோது சிறிதான உறை கிணறு இருப்பது தெரியவந்தது.

இந்த உறை கிணறு ஆறு அடுக்குகளுடன் காணப்படுகிறது. இந்த உறைகிணறு சங்க காலத்தை சேர்ந்தது. 2000 வருடங்களுக்கு முன் கோடைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைத்து அதன்பின் தெளிய வைத்து அந்த தண்ணீரை குடிக்க மக்கள் உறைகிணறுகளை பயன்படுத்தினார்கள். மேலும் இதே போன்று சிறிது பெரிதுமாக பல உறைகிணறுகள் இந்தப்பகுதியில் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது. இதனையடுத்து சங்ககால பொது மக்கள் பயன்படுத்திய மண்ணாலான விளையாட்டுக் கருவிகள், அம்மி, சுடுமண் குழாய்கள் போன்ற புழங்கு பொருள்களும், கருப்பு, சிவப்பு, பானை ஓடுகளும் கண்டுபிடிக்கபட்டு வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது இப்பகுதியில் முன்னால் மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கலாம். அதன்பின் அழிந்து இருக்கலாம் என்பது தெரியவருகிறது. இந்த பிடாகம் குச்சிபாளையம் பகுதியில் உள்ள உறை கிணறுகளை பாதுகாப்பதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அப்போது தமிழழகன், விஷ்ணு பிரசாத் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |