Categories
தேசிய செய்திகள்

தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி இது அவசியமில்லை….சூப்பர் அறிவிப்பு….!!!

தென்மாவட்டத்தில் உள்ள  பயணிகளின் வசதிக்காக, நாகர்கோவில் – பெங்களூரு -நாகர்கோவில் விரைவு ரயில், பெங்களூர் அருகே உள்ள கார்மேலரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில் – பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலரம் என்ற ரயில் நிலையத்திற்கு முறையே மாலை 05.39 மற்றும் காலை 07.29 மணிக்கு வந்து சேர்ந்து மாலை 05.40 மற்றும் காலை 07.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த புதிய வசதியை ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14 வரை ஆறு மாதத்திற்கு பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள், போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பெங்களூர் சென்று சுற்றி வர வேண்டியதில்லை என்பதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |