Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. இனி கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் அறிகுறிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கேரளாவில் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி மற்றும் கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |