Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை காரணமாக தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் முன்கூட்டியே இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் கேரளாவில் அடுத்த இரண்டு வாரங்களில் மே 27 மற்றும் ஜூன் 2ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்றும், இது 24ஆம் தேதி ஒரு புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வடகிழக்காக நகர்ந்து வடக்கு வங்காள விரிகுடா அருகே ஒடிசா -மேற்கு வங்காள கரையை 26ஆம் தேதி அடையும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |