ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று முதல் பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி இந்த ஆண்டு நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், இன்று முதல் மழை பெய்யும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் கோடை வெப்பத்தில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளிலும் இந்த பருவ மழையால் நிரம்பி குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.