தமிழ்நாட்டில் 2022 ஆம் வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90 சதவிகிதம் அதிக அளவில் பெய்திருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இது தொடர்பாக துணைவேந்தர் வே.கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90% அதிகமாக பெய்து இருக்கிறது. இந்த பருவமழை காலம் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்ற காரணத்தினால் மழை அளவு மேலும் அதிகரிக்கும். மேலும் பல மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதலாக 150 சதவீதத்திற்கும் மேலாக மழை பதிவாகி இருக்கிறது தமிழகத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1752 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த பருவத்தில் நீலகிரியின் சராசரி மழை அளவு 701 மில்லி மீட்டர் என்ற நிலையில் சுமார் 150 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகி இருக்கிறது. தூத்துக்குடியின் சராசரி மழை அளவு 37 மில்லி மீட்டர் எனும் நிலையில் 110 மில்லி மீட்டர் மழையும் திருப்பூரில் மழை அளவு 89 மில்லி மீட்டர் என்ற நிலையில் 2 61 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.
அதேசமயம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் சராசரி மழை அளவில் காட்டிலும் குறைவான மழை பெய்து இருக்கின்றது. இவற்றில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் இயல்பை விட 27 சதவீதம் குறைவாக மறைவாக இருக்கிறது. மேட்டூர் அணை இந்த வருடம் முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில் குருவை சாகுபடி அறுவடை பருவத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய மழையால் நெற்பயிகள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. பயிர் மஞ்சள் நிறத்திற்கு வந்ததும் அறுவடை செய்யும் எண்ணத்தில் இருக்கும் விவசாயிகள் நெல்மணிகள் முற்றிவிட்டதா என பார்த்துவிட்டு அறுவடையை உடனடியாக தொடங்க வேண்டும் அதேபோல சம்பா தாலடி நாற்றங்கால்களை விவசாயிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் நெல் வயல்களில் நீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகளை விவசாயிகள் கவனித்தால் பயிர் சேதத்தில் இருந்து மீள முடியும். அதே போல கரும்பு பயிரை சோகை உரித்தும் வாழைக்கு முட்டுக்கொடுத்தும் காப்பாற்ற வேண்டும். காய்கறி பயிர்களுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்துவதுடன் மழை முடிந்த பிறகு உரமிட வேண்டும். இந்த பருவத்தில் நல்ல மழை பெய்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் 45 இடங்களில் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 80 சதவீதம் சரியான கணிப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று வாரங்களுக்கு மழை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.