கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடந்தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்ப காலத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. அதன் பின் பல மாவட்டங்களில் மழை பெய்யவே இல்லை. ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த இரண்டு வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 251.8 மில்லி மீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்து இருக்கின்றது. இது கடந்த மூன்று வருடங்களில் பெய்த மழை அளவை விட மிகக் குறைவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.