Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் மகாராணி காலமானார்.. மீளா துயரத்தில் ஆழ்ந்த மக்கள்..!!

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜூலு இனத்தின் மகாராணியான Shiyiwe Mantfombi Dlamini Zulu காலமானதாக ராஜகுடும்பம் அறிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜூலு என்ற இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu, 65 வயதில் தன் கணவரான மன்னர் Goodwill Zwelithini இறப்பிற்குப் பின் கடந்த மாதம் தான் நாட்டினுடைய ஜூலு இனக்குழுவின் இடைக்கால தலைவராக ஆனார். அதன் பிறகு கடந்த வாரத்தில் இவர் ஒரு நோயால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் காலமானதாக ராஜகுடும்பம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஜுலுவின் பிரதமரான இளவரசர் Mangosuthu Buthelezi, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகாராணியின் மரணம் கடும் அதிர்ச்சி மற்றும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Goodwill Zwelithini மன்னர் மற்றும் மகாராணிக்கு எட்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகனான இளவரசர் Misuzulu தான் அரியணையில் அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |