வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் போர் விமானங்கள் பறந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளது இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.