Categories
உலக செய்திகள்

“தென் கொரியா கடற் பரப்பிற்குள் நுழைந்த வடகொரியா வர்த்தக கப்பல்”… அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு…? பெரும் பதற்றம்…!!!!!

அணு ஆயுதங்களை தாக்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வபோது வடகொரியா அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை மேற்கொண்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில் தென்கொரியாகவும் வடகொரியாவும் இன்று அடுத்தடுத்த துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் நாட்டின் கடல் பரப்பிற்குள் வடகொரியாவின் வர்த்தக கப்பல் இன்று காலை நான்கு மணி அளவில் நுழைந்திருப்பதாகவும் அதனை எச்சரிக்கும் விதமாக கடற்கரை வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தென்கொரியா கூறியுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலடியாக வடகொரியாவும் பத்து முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இரு நாட்டு கடற்படையும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |