Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு அலர்ட்… உஷாரா இருங்க…!!!

பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரட்டை ரயில் பாதையை விரைவு ரயில் மூலம் சோதனை செய்கிறார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் A.K. ராய் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் மதுரை மற்றும் கோவில்பட்டி, கங்கைகொண்டான் மற்றும் நெல்லை இடையேயான இரட்டை இரயில்பாதை விரைவு ரயில் மூலமாக சோதனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த சோதனை நடக்கும் நேரங்களில் பொதுமக்கள் தண்டவாளங்களின் குறுக்கே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |