தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கொரோனா தாண்டவமாடுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமுலில் இருக்கிறது. தமிழகத்திலும் இதற்கான பல்வேறு அறிவிப்புகள் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பணிகளை விரைவு படுத்திய முதல்வர் அடுத்த தென் மாவட்டங்களில்கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7ஆம் திருநெல்வேலி செல்ல உள்ளார். அங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரே நேரடியாக களத்திற்க்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை பார்ப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.