Categories
மாநில செய்திகள் வானிலை

தென் மாவட்ட மக்களே…! இது முழுக்க முழுக்க உங்களுக்கு தான்… இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை …!!

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் , கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே போல நாளையும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஆகிய  இடங்களில் மிக கனமழையும்  புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் கன மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |