வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் தென் மாவட்டங்களில் நாளை முதல் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.அதனால் நாளை வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு கடந்த குமரி கடல் பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிசம்பர் இரண்டாம் தேதி தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக கனமழை மற்றும் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
மேலும் டிசம்பர் 3 ஆம் தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் அதிக மழை மற்றும் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசும். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.