Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வித பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கோடை விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி முதல் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில்களில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |