தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் இருக்கும் மகாமாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வரவழைக்கப்பட்ட கோவில் அழகே தெப்பம் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட மகாமாரியம்மன் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் பிறகு சிற்பத்தை பிரிக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள்.
இதில் மூன்று பேர் சாப்பிடுவதற்காக சென்று விட்டார்கள். ஆனால் ஒருவர் மயமானார். இதனால் இது குறித்து காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது குளத்தில் இருந்து தொழிலாளியை கரைக்கு கொண்டு வந்தார்கள். பின் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் காவேரிகரை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.