தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ள நிலையில் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “நம்ம ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் தான் ஆகின்றன. அதிலும் மூன்று மாதங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையால் கழிந்துவிட்டன . அது போக மீதமுள்ள ஆறு மாதங்களில் எத்தனை நலத்திட்டங்கள் முடியுமோ அத்தனையையும் திமுக நிறைவேற்றியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை கடனாளியாக மாற்றிவிட்டனர். ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல் தலைவர் கொரோனா நிவாரணத்திற்காக 4000 ரூபாய் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ஆவின் பால், பெட்ரோல், டீசல் என அனைத்து விலைகளையும் படிப்படியாக குறைத்து வருகிறோம். தமிழக சட்டமன்றத்தை முடக்க போகிறோம் என பழனிச்சாமி அடிக்கடி கூறி வருகிறார். தைரியம் இருந்தால் முறைச்சு பார்க்கட்டும் அவ்வாறு முடக்கினாலும் கூட மீண்டும் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று பெரும்பான்மையாக ஆட்சியை பிடித்து காட்டுவோம் என்று கூறினார்.