இயற்கை அதிசயம் கொண்ட மூலிகைகளில் ஒன்று நாயுருவி, அதன் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்.
‘சாவையே தடுக்கும் குணம் கொண்டது’ என சித்தர்களால் போற்றப்பட்டதில் ஓன்று நாயுருவி. அதற்காக வேகமாக வரும் இரயிலோ அல்லது பேருந்து முன்னால் நின்றாலோ விபத்து ஏற்படாது என்று அர்த்தமாகாது. நாயுருவி, நோய்களைத் தடுக்கும் மகா சக்தி கொண்டுள்ளது.
உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். முகத்திற்கு அழகூட்டக் கூடியது.
வயிற்று நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் நாயுருவிக்கு இருக்கு. மூல நோய்களை குணமாக்கும்.
நாயுருவி, ரத்தத்தில் உள்ள கிருமிகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்பு, தசை மற்றும் மூளையை வலுவூட்ட செய்யும்.
உடம்பில் ஏற்படகூடிய ஆறாத புண்களை ஆற்றுவதோடு நற்பண்புகளையும் தரக்கூடிய தன்மை கொண்டது நாயுருவி .கண், காது, மூக்கு, இதய நோய்களை குணப்படுத்தும்.
நாயுருவியில் இரண்டு வகைகள் உண்டு. வெள்ளை மற்றும் கருப்பு நாயுருவி ஆகும். இரண்டுமே சமமான ஒரே விதமான மேன்மையான மூலிகை குணங்கள் கொண்டவை.