16 வயது சிறுமியிடம் தவறாக நடந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விடுதலை அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
அமெரிக்காவை சேர்ந்த கோட்டேன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இது குறித்து காவத்துறையினர் விசாரணையில் சிறுமி அந்த நபருக்கு பழக்கமானவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய கோட்டேன் சம்பவம் நடந்த அன்று தான் அதிக அளவு மது அருந்தி இருந்ததால் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என கூறினார். அதோடு தன்னை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்காமல் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.