ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ கால் செய்து பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் காலமாக அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மோசடி கும்பல், பெண்களை நிர்வாணமாக வீடியோ கால் செய்ய வைத்து அதை அட்டன் செய்யும் நபர்களிடம் பேசி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இது போன்ற மோசடி கும்பலிடம் தப்பிக்க வேண்டும் என்றால் வீடியோ கால் வரும்போது முன்பக்க கேமராவை உங்களது விரல்களால் மறைத்துக் கொள்ளுங்கள். இதை செய்த உடனே அந்த கும்பல் இணைப்பை துண்டித்து விடுவார்கள். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள்.