Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரியாமல் தவறு நடந்தாலும்…. அதற்கு அவர்களே பொறுப்பு…. முன்னாள் அமைச்சர்களுக்கு பிடிஆர் எச்சரிக்கை…!!!

சென்னை புளியந்தோப்பு  கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதையடுத்து தரமற்ற முறையில் வீடுகளை கட்டிய உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தாமோதரன் தரமற்ற முறையில் கட்டடம் கட்டியதில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும் ஜனநாயக முறைப்படி அதற்கு அவர்களே பொறுப்பு. எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |