Categories
பல்சுவை

தெரியாம வந்துட்டேன்!… ப்ளீஸ் என்னை விட்ருங்க!…. அதிர்ந்து போன பாம்பு…. பகீர் வீடியோ….!!!!

சமூகஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இரை தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பாம்பின் பார்வை எறும்பு புற்றின் மீது இருப்பதை காண முடிகிறது. தன்னுடைய இரை அப்புற்றில் உள்ளதாக பாம்பு நினைக்கிறது. இதையடுத்து புற்றை தாக்க தொடங்கியதும் அதில் இருந்த அனைத்து எறும்புகளும் பாம்பை தாக்கியது.

 

மற்றொருபுறம் எறும்புகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன பாம்பு, சற்று நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. எனினும் புற்றில் இருந்து வெளியே வந்த பிறகும் எறும்புகள் பாம்பை துரத்துவதை நிறுத்தவில்லை என்பது ஆச்சர்யமான ஒரு விஷயம் ஆகும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, பாம்பு தன் வாலை அங்குமிங்குமாக ஆட்டுகிறது. இருப்பினும் எறும்புகள் பாம்பின் உடலை தொடர்ந்து கடித்துக்கொண்டே இருக்கிறது. தங்களது இருப்பிடத்திற்கு நுழைந்த பாம்பின் மீது எறும்புகள் மிக கோவமாக இருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

Categories

Tech |