ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பப் போகிறார் என்று கூறியுள்ளார்..
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லை. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2022 ஆசிய கோப்பையில் தனது முதல் டி20 சதத்துடன் மீண்டும் கோலி ஃபார்மிற்கு திரும்பினார். இந்த சதம் உலக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் விராட் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இன்று செவ்வாய்க்கிழமை விளையாட உள்ளது. தொடருக்கு முன்னதாக, விராட் கோலி ஒரு சிறந்த வீரர் என்றும், அவர் பார்முக்கு திரும்புவார் என்பது தெரியும் என்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட் கம்மின்ஸ் கூறியதாவது, முற்றிலும் உண்மையைச் சொல்வதென்றால், அந்த போட்டிகள் (ஆசிய கோப்பை) எதையும் நான் பார்க்கவில்லை. இலங்கை வென்றதாக நான் நினைக்கிறேன்? உண்மையாக, நான் அதில் எதையும் பார்க்கவில்லை. நான் விராட் கோலியைப் பார்த்தேன், அவர் சதம் அடித்தார் என்று நினைக்கிறேன், ஆம் அவர் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் எப்போதுமே ஏதாவது ஒரு கட்டத்தில் ஃபார்முக்குத் திரும்பப் போகிறார்.அவர் சவாலாக இருக்கப் போகிறார், ”என்று கூறினார்.
ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 தொடரில் பங்கேற்கிறது.. ஆஸ்திரேலியா தனது இந்திய சுற்றுப்பயணத்தை மொஹாலியில் செப்டம்பர் 20ஆம் தேதி (இன்று) முதல் டி20ஐயுடன் தொடங்கவுள்ளது. அடுத்த டி20ஐ செப்டம்பர் 23ஆம் தேதி நாக்பூரில் நடைபெறும், அதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி டி20ஐ ஐதராபாத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, நாதன் எல்லிஸ்.