லண்டன் தெருக்களில் ஆண் ஒருவர் நிர்வாணமாக ஓடி இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவ தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு குறவன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து உருமாறிய கொரோனா காரணமாக லண்டனில் ஊரடங்கு நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் தெருக்களில் ஆண் ஒருவர் நிர்வாணமாக ஓடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரிட்டிஸ் அருங்காட்சியகத்திற்கு அருகே நிர்வாணமாக ஓடிய அந்த மனிதர், மிகவும் மகிழ்ச்சியாக ஓடியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தன்னை சுத்தப் படுத்துவதற்காக ஆடைகளை கழற்றி வைத்து விட்டு வந்ததாக அந்த மனிதர் கூறியுள்ளார்.