Categories
மாநில செய்திகள்

750 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தெருவாரியாக நாளொன்றுக்கு 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அதற்கான பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். தெருவாரியாக நாளொன்றுக்கு சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

மேலும் ஜனவரி 7ஆம் தேதி பணி நாளாகவும், அதற்கு பதிலாக ஜனவரி 15ஆம் தேதி விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 750 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளமுடியும். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களை நடமாடும் கண்காணிப்பு குழுவின் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. நியாயவிலை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு வழி காட்டுதலை கடைபிடிக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |