பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள சின்னத்தம்பிபாளையத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவரது வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்றுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் சசிகலாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த சசிகலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.