Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய ரவுடி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றத்திற்காக ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவுடியானா ரமேஷ் என்பவர் ஜெயந்தியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஜெயந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |