சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலும் திரை துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. திரைப்படத்துறைக்கு அதிமுக ஏராளமான உதவிகளை செய்துள்ளது. அம்மா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கட்டிய பாதையில் அதிமுக தற்போது தொடர்ந்து பயணம் கொண்டிருக்கிறது அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். ஆனால் சினிமாக்களில் எளிதாக ஜொலித்து விடலாம்.
கட்சியில் அப்படி கிடையாது. தெருவில் நின்று பலரைப் பார்த்து படிப்படியாக ஏறி தான் இந்த நிலைக்கு வர முடியும். ஆனால் திரை உலகில் மக்கள் மனதில் பதியும் விதமாக திரைப்படங்களில் நடித்து அந்த நிலைக்கு எளிதாக முன்னேறி விடலாம். ஆனால் அரசியல் கடினமானது. எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அதை சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். அரசியல் என்பது முள்ளும், மேடும், பள்ளமும் நிறைந்த பாதை என்று பேசி உள்ளார்.