Categories
மாநில செய்திகள்

தெருவில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட…. 36 குழந்தைகள் மீட்பு….!!!!!!

மதுரை நகர்ப்புற பகுதியில் உள்ள சாலைகளில் சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் அணிஷ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க சோதனைகள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் சமூக பணியாளர் அருள்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் விஜய சரவணன், உறுப்பினர்கள் பாண்டியராஜா, சாந்தி, சண்முகம்,சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா தலைமையில் 180 க்கும் அதிகமான காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர்கள் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், அண்ணாநகர், காளவாசல், மேலமடை, கே.கே.நகர் என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினர். மேலும் போக்குவரத்து சிக்னல்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணித்து வந்தனர். அந்த நேரத்தில் சாலையோரம் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டனர். அதன் பின்னர் அவர்களை பிச்சை எடுக்க வைத்தவர்களையும் அதிகாரிகள் பிடித்தனர். இதன் மூலமாக சாலையில் ஆதரவின்றி சுற்றி வந்த 31 முதியவர்கள், பிச்சை எடுத்த 36 குழந்தைகள் ஆகியோரை மீட்டனர்.

Categories

Tech |