பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை கௌரவிக்கும் அடிப்படையில் உக்ரைன் Odesa-ல் உள்ள தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது.
Mayakovsky தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என்று பெயர் மாற்ற Odesa-வில் உள்ள Fontanka கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்த முக்கியமானவர்களில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவர் ஆவார். அதாவது ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய தலைவர் என்று Fontanka கவுன்சில் புகழ்ந்துள்ளது. இந்த அறிவிப்பை இணையத்தில் கவுன்சில் அறிவித்தது. இதற்கு முன்பாக இத்தெருவுக்கு பிரபல சோவியத் கவிஞரும் நாடக ஆசிரியருமான விளாடிமிர் மாயகோவ்ஸ்கியின் பெயர் வைக்கபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெருவுக்கு சோவியட் கவிஞரின் பெயருக்கு பதில் போரிஸ் ஜான்சன் பெயரை உக்ரைன் மாற்றி இருப்பது ரஷ்யாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. உக்ரைனுக்கு தன் ஆதரவை வெளிப்படுத்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அண்மையில் திடீரென்று எந்தவித முன்னறிவிப்பின்றி உக்ரைன் தலைநகர் கீவ் பயணித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அதனை தொடர்ந்து, இருவரும் கீவ் சாலைகளில் நடந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியது. மேலும் உக்ரைனுக்கு 450 மில்லியன் பவுண்டுகள் ஆயுதங்கள் மற்றும் 400 மில்லியன் பவுண்டுகள் உதவி வழங்குவதாக போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார் என்பது கவனிக்கத்தக்கது.