மும்பையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டால் உடனே தெருநாய்கள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றிவரும் நாய்களை சிலர் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாயின் ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் வடக்கு அந்தேரியில் தெரு நாயின் ஆண் உறுப்பை மற்ம நபர்கள் வெட்டிய நிலையில், ரத்தம் வழிந்தோடிய படி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாய்க்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.