தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உமா ஆனந்த் ஆங்கிலத்தில் பேசி உள்ளார் அப்போது மற்ற உறுப்பினர்கள் தமிழில் பேசுங்கள் பிரதமர் மோடியே தமிழில் தானே பேசுகிறார் என கூறியுள்ளார்.
அதற்கு அவர் நான் இந்தியிலா பேசினேன் ஆங்கிலத்தில் தானே பேசுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தெருநாய்கள் அதிகமாக இருப்பதாகவும் வாகனங்களில் செல்லும்போது பலரை அவைகள் துரத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி பேசும்போது தெருநாய்களை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதனை கொள்ள முடியாது. ஆனால் மாநகராட்சியில் 75 ஊழியர்கள் நாய்களைப் பிடித்து வருகின்றார்கள் அதற்கு மாநகராட்சியும் ப்ளூ கிராஸ் அமைப்பும் இனப்பெருக்க தடை சிகிச்சை செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.